மெரீனா இளைஞர்களின் புதிய பத்து கோரிக்கைகள்

மெரீனா இளைஞர்களின் புதிய பத்து கோரிக்கைகள் (Acc to all WA groups n FB posts)



மாணவர்களின் அடுத்த 10 கோரிக்கைகள்னு இதத்தான் அறிவிக்கப்போறாங்க/அறிவிக்கனும்னு கலந்தாலோசிச்சிட்டுருக்கறதா சொல்லிக்கறாங்க..

#1. ஜல்லிகட்டுக்கு அவசர சட்டம் அல்ல..யாராலும் ஒருகாலும் அசைக்க முடியாத உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர தீர்ப்பே வேண்டும்.

#2. அமெரிக்காவின் பொருளாதார ஏகாதிபத்திய சூழ்ச்சியில் ஊடுருவிய பீட்டாவை இந்தியாவை விட்டே துரத்த வேண்டும்.

#3. ஆவின் பால் முழுக்க முழுக்க நாட்டு பசுவின் பாலாகத்தான் இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு சர்க்கரை நோயை உண்டாக்க கூடிய ஜெர்சி பசுவின் பால் ஆவின் பாலில் கலக்கபட கூடாது.

#4. hybrid எனப்படும் மரபனு மாற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டுக்காரன் கொடுத்த அனைத்து விதைகளும் தடை செய்யப்பட வேண்டும். ஏனென்றால் வெள்ளைக்காரனே பாலையும் விதைகளையும் அதன் மூலம் நோயையும் அதற்கான மருந்தையும் தருவான்..நாங்கள் எங்கள் உயிரையும் பணத்தையும் தர வேண்டுமா?

#5. வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட அனைத்து ஜெர்சி பசுக்களும் இன்றே கப்பலேற வேண்டும்.

#6. தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள எல்லா வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளும் இழுத்து மூடப்பட வேண்டும்.
விவசாயிகளின் தண்ணீர் தேவையை உறுதி செய்ய தமிழகத்தில் இருந்து கடலில் கலக்கும் எல்லா ஆறுகளின் குறுக்கேயும் கடலில் கலப்பதற்கு 1 கி.மீ முன்பே தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். அணையை அணையாக பயன்படுத்தினால் 3000 டி.எம்.சி நீரை சேமிக்கலாம். ஆற்றையே அணையாக பயன்படுத்தினால் 300000 டி.எம்.சி நீரை சேமிக்க முடியும். கருகிய பயிரை பார்த்து என் தகப்பன் எனக்கு சோறு போட முடியவில்லையே என தற்கொலை செய்வதையும் எவனோ ஒருவனிடம் தண்ணீரை பிச்சை கேட்பதையும் என்னால் சகிக்க முடியாது. இந்த பொறுப்பை மதிப்பிற்குறிய ஐயா திரு. சகாயம் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

#7. முதல்வன் படத்தில் வருவது போல் https://t.co/Hvm3lptBPIஎன்ற ஒரு வெப்சைட் உருவாக்கப்பட்டு அதில் ஆளும் அனைத்து தொகுதி, வட்ட, மாவட்ட மற்றும் வார்டு தலைவர்களின் புகைப்படங்களுடன் கூடிய பக்கங்கள் திறக்கப்பட்டு, அந்நியன் படத்தில் வருவது போல் அந்தந்த பகுதி மாணவர்களாகிய நாங்களே எங்கள் பகுதி குறைகள் மற்றும் தேவைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

#8. பூரண மது விலக்கு கொண்டு வர மாட்டீர்கள் என தெரியும்..குடிகாரர்களுக்கோ தங்கள் குடும்பத்தை பற்றி கவலை இல்லை..ஆனால் அவரது இறப்பிற்கு பின் அவரது குடும்பத்தினர் வாழ வழி இல்லாமல் கண்ணீர் வடிப்பதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது. எனவே குடிப்பவர் இறக்கும் பட்சத்தில் அவர் குடிப்பதற்கு செலவழித்த பணம் அரசாங்கத்திடமே சேர்வதால் அரசாங்கமே அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

#9. விவசாயிகளுக்கு என்று ஒரு வெப்சைட் https://t.co/fpevpgkgpWவேண்டும். அதில் விவசாயிகள் தாங்கள் விற்க தயாராகும் அனைத்து விவசாய உற்பத்தி பொருட்களையும் தாங்களே அரசு நிர்ணயித்த விலையில் நேரடியாக விற்கவும் வணிகர்கள் நேரடியாக வாங்கவும் இடைத்தரகர்களின் சுரண்டல் இல்லாமல் olx போல செயல்பட வேண்டும்.

#10. காவிரி பிரச்சனையை தீர்க்க அரசு என்ன முயற்சி எடுத்திருக்கிறது எனவும் இனி அதை தீர்க்க அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைகளையும் அதற்கான நேரக்கெடுவையும் மாணவர்களிடம் கூறவேண்டும்..