நாம் சிங்கங்கள் செம்மறி ஆடுகள் அல்ல!!

நாம் சிங்கங்கள் செம்மறி ஆடுகள் அல்ல!!


சல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடக்கும் இந்த போராட்டத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்

முதலில் இந்த மாபெரும் போராட்டத்திற்கு கூடிய அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்!!

சிம்பு மற்றும் ஆதி அவர்களே எங்களுக்குள் இருந்த நெருப்பை பற்ற வைத்தமைக்கு நன்றி!!

தமிழர்களின் தேசிய வியாதியாக மறதி இருந்தது, அதைப் பயன்படுத்தித்தான் இந்த அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றி வந்தார்கள் நாமும் நம் வயிறு நிறைந்ததா, வாழ்க்கைக்கு வசதியும், பணமும் கிடைத்தால் போதும் என்று பெரும்பான்மையானோர் இருந்து வந்தோம்

ஆனால் அந்த நிலைமை கடந்த ஒரு வாரங்களில் நிலைமை தலை கீழாக மாறிவிட்டது.

“நம் உணர்வுகளின் வெடிப்பு போராட்டக்களங்களில் தீயாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது அரசாங்கம் செவி சாய்க்க வில்லையெனில் அவர்களை சுட்டெரித்துவிடும்”.

இது போராட்டக்களத்தில் நான் கண்ட மறுக்க முடியாத உண்மை!!

யாராவது செய்ய மாட்டார்களா என்று ஏங்கிய காலம் போய் நாம் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள் என்று களத்தில் இறங்கிய போதே நாம் வென்றுவிட்டோம்.

இன்றைய வாழ்க்கையில் ஆங்கிலம் தவிர்க்க முடியாதது, ஒத்துக்கொள்கிறேன் அதற்காக தமிழை தவிர்க்க வேண்டும் என்று யாரோ தவறான பாடம் கற்பித்து விட்டார்கள்.

“தமிழ் பேசினால் நம்மை பாமரன், பட்டிக்காட்டான், பண்பற்றவன் என யாரோ நம் ஆதி மனத்தில் ஆழ பதிய வைத்திருக்கிறார்கள்”

நாமும் அதை நம்பி ஆங்கில மோகத்தில் ஒரு பன்றி போல புரண்டுக் கொண்டிருக்கிறோம்

இந்த அடிமைத்தனத்தை உடைத்து எரிய வேண்டாமா??

நம் பரம்பரியக் கலைகளை கற்பியுங்கள், பாரம்பரிய விளையாட்டைப் புதுப்பியுங்கள் சிலம்பம், பரதநாட்டியம், தற்காப்புக் கலைகள், துவந்த யுத்தம், வாள் சண்டை, வில் அம்பு என பல இருக்கிறது ஆனால் எதை பற்றியும் கவலைப்படாமல் நாமோ பிரேக் டான்ஸ் ஆடுவதிலும், சூப்பர் சிங்கரில் பெரிய ஆளாக வேண்டுமென்று குழந்தைகளை ஒரு பந்தயக் குதிரைப் போல நடத்தி வருகிறோம்.

நம் பாரம்பரியத்தையம் கலாச்சாரத்தையும் நிலைநாட்ட என்ன செய்யலாம் என்னால் முடிந்த சில யோசனைகள்

நம் வீட்டில் வளரும் சிறுவர் சிறுமிகளுக்கு எதைக் கற்பிக்கலாம் என்பதன் தொகுப்புதான் இது

மக்களே நாமும் உறுதி எடுத்துக் கொள்வோம் இனிமேல் கோக், பெப்சி தயாரிப்புகளை வாங்கமாட்டோமென்று!!போராட்டத்தோட நின்று விடாதீர்கள், உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் பற்றி கற்பியுங்கள்.உங்கள் குழந்தைகளுக்கு நம் உணவு, உடை, உறைவிடம், பழக்கவழக்கம், உறவு, வரலாறு எல்லாவற்றையும் கற்பியுங்கள். அயல்நாட்டு மோகம் கொண்டு அலையாதீர்கள்.தமிழில் சரளமாக உரையாட விடுங்கள், அவர்களின் கவிதை, கற்பனைத்திறனை வளர்க்க விடுங்கள்.இன்றைய கல்விமுறை பணம் சம்பாதிப்பது எப்படி என்று சொல்லித்தருகிறதே தவிர நல்ல மனிதனாக வாழச் சொல்லவில்லை, நீதி நூட்கள், திருக்குறள், பாரதியின் எழுச்சிமிகு வரிகளைக் கற்பியுங்கள் .குழந்தைகளுக்கு, போக்குவரத்து நிறுத்தத்தில் மஞ்சள் விளக்கு எரிந்தால் நிற்க வேண்டும் எனச் சொல்லுங்கள் கிடைக்கும் இடைவெளியில் செல்லலாம் என்றல்லவிளையாடினால் படிப்புதான் பாதிக்கப்படும்!! விளையாடாவிட்டால் உடல்நலமே பாதிக்கப்படும்!!மது அருந்துவதும் புகைப்பதும் கெத்தாக பார்க்கப்படும் வரையில் மதுவும் புகையும் அழியாது.மரங்களை சுவாசிக்க விடுங்கள் அது மனிதர்களை சுவாசிக்க வைக்கும்!!அதிகம் சிந்திக்கத்தூண்டும் அபார சக்தி கொண்டவை -“புத்தகங்கள்”வியர்வையை வரமால் வேலை பார்க்கத் தொடங்கியதுதான் நம் ஆரோக்கியத்தின் மீது நாம் செய்த முதல் வன்முறை.நம்மிடம் உள்ள ஆரோக்கியமான பொருளை எல்லாம் அவன் எடுத்துக்கொண்டு ஆரோக்கியமற்றதை நம்மிடம் விற்றுக்கொண்டிருக்கிறான் –வெளிநாட்டுக்காரன்சுவாசங்கள் தொடர்வது மட்டும் வாழ்க்கையில்லை முயற்சிகள் தொடர்வதுதான் வாழ்க்கை!!தமிழகத்தில் மனிதர்களைவிட அதிகம் கொலை செய்யப்பட்டவை -“ஆறுகள்”“மரம் நடுதல்” என்பதைவிட “மரம் வளர்த்தல்” என்பதே சரி!அடிக்கிற வெயிலுக்கு மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் தவிர்த்தல் செயல்படுத்தலைன்னா அடுத்த வருடம் வீட்டுக்குள்ள கூட இருக்க முடியாது“மகிழ்வித்து மகிழ்” அதை நம் தாய், தந்தையிடம் இருந்து தொடங்குவது நலம்.வெயிலுக்காக ஏசியைத் தேடுவதை விட மரம் வளர்ப்பது சிறந்தது!!துஷ்டனைக் கண்டால் தூர விலகாதீர்கள் தூக்கிப் போட்டு மிதியுங்கள்.உடைதான் நாகரிகம் என்கிறது ஆங்கிலம் உள்ளம் தான் நாகரிகம் என்கிறது தமிழ்!!பூவுடன் சேர்ந்து நாறும் மணப்பதே நட்பு நாறுடன் சேர்ந்து பூவும் நாறுவதல்ல நட்பு!!தமிழ் வளர்க்க வீதிக்கெல்லாம் வரவேண்டாம் உங்கள் வீட்டிலிருந்தே தொடருங்கள்.இயற்கையோடு ஒன்றி வாழ்வாரே வாழ்வார் வாழார் இயற்கையால் தண்டிக்கப்படுவார்.வெளிநாட்டுக்காரன் சொல்வதே வேதவாக்கு என்று நம்பும் வரை நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காப்பற்றவே முடியாது.மருத்துவர் நோய் வந்த பிறகு காப்பாற்றுவார். விவசாயி நோய் வராமல் காப்பாற்றுவார்.இந்த சமூகத்தின் சிறந்த தலைமுறைகளை உருவாக்குவதில் பெண்தான் மிகப்பெரிய பங்கு வகிக்கிறாள் அதனால் தங்களின் பெண் குழந்தைகளை நன்றாக வளருங்கள்.நாம் அன்று வெளிநாட்டவனின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் அடிமை!! இன்று அவன் தயாரிக்கும் பொருளுக்கும் அவன் கலாச்சாரத்திற்கும் அடிமை!!அரசாங்கத்தைக் குறைக் கூறுவதை விட குடிக்கும் நம் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பேசுவதை நிறுத்திவிடுங்கள் கண்டிப்பாக மாற்றம் வரும்.கவலையை மறக்க யாரும் குடிப்பதில்லை பிரச்சனையை எதிர் கொள்ளத் தெரியாத கோழைகளே அந்த வார்த்தையை சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள்!!உயிர் காப்பவர் மருத்துவர் மட்டுமல்ல விவசாயியும்தான்..#விவசாயிவிளையாட்டு எதுவாயினும் மொபைல் போனில் விளையாடுவதை விட மைதானத்தில் விளையாடுவதே சிறந்தது அதுவே ஆரோக்கியம் நிறைந்தது, காலத்தால் அழியாதது.

இறுதியாக ஒன்று உங்களுக்கு

நம் பழக்கங்கள், நாம் பயன்படுத்தும் சொற்கள், நாம் வாழ்வில் எடுக்கும் முடிவுகள் எனக் குழந்தைகள் நம்மை நகல் எடுக்கின்றன. எனவே கவனமாக இருங்கள்..

குழந்தைகளுக்குப் புரியாததைப் புரிய வையுங்கள் உங்கள் அதிகாரத்தால் பணிய வைக்காதீர்கள்.